Home /News /tamil-nadu /

அச்சுறுத்தும் ஒமைக்ரான்... தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்... தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30.11.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி, கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ், தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.820, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 01.12.2021-ன்படி, 15.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

    பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30.11.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி, கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Also Read : தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்
     இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.


    தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது அண்டை மாநிலங்களில் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால், பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதன் காரணமாக, நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    Also Read : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - கடற்கரை செல்ல தமிழக அரசு தடை
     மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும், பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி