Home /News /tamil-nadu /

ஒமிக்ரான் பரவல்: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு உத்தரவு

ஒமிக்ரான் பரவல்: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Tamil Nadu restriction | Theaters | ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

    இந்தநிலையில், தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை அறிவித்துள்ளது. அதன்படி,

    1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி
    வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள்
    நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி
    செயல்படும்.

    2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது
    நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து
    கடைபிடிக்கப்படும்.

    3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள்
    மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும்
    அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

    4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/
    Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட
    அனுமதிக்கப்படுகிறது.

    5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்
    100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

    6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல்
    அனுமதிக்கப்படும்.

    7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில்
    50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை
    உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,
    விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50%
    வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்
    ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட
    அனுமதிக்கப்படும்.

    10) திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி