Home /News /tamil-nadu /

ஒமைக்ரான் குறித்து பதற்றப்பட வேண்டாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலர்

ஒமைக்ரான் குறித்து பதற்றப்பட வேண்டாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலர்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

கொரோனா வந்தாலே ஒமைக்ரான் என்று சொல்ல முடியாது. கொரோனா பாசிட்டிவ் என்று மட்டும் சொல்லுங்கள். ஒமைக்ரான் பாசிட்டிவ் என சொல்ல வேண்டாம் என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஒமைக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

    கொரோனா 2 அலைகளின் போது மருத்துவம் மற்றும் மக்கள் சேவையாற்றிய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னை மாவட்ட ஜமாஅத் இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது-

    கொரோனா தொற்று காலத்தில் தன்னார்வலர்களின் தொண்டும், சேவையும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒமைக்ரான் பரவல் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நாள் ஒன்றுக்கு டெல்டா வகை வைரஸ் பரவல் தான் அதிகமாக உள்ளது.12 ஆய்வகங்களில் RT PCR மரபணு சோதனை மேற்கொள்ளப் படுகிறது. 4502 பயணிகளை பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகியுள்ளது.

    Also Read : தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

    கொரோனா வந்தாலே ஒமைக்ரான் என்று சொல்ல முடியாது. கொரோனா பாசிட்டிவ் என்று மட்டும் சொல்லுங்கள். ஒமைக்ரான் பாசிட்டிவ் என சொல்ல வேண்டாம்.

    7.4 கோடி பேருக்கான தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். முககவசம் அணிவதை மறக்க வேண்டாம்.

    1.27 லட்சம் தெருக்களில் 1.25 லட்சம் தெருக்களில் நோய் தொற்று கிடையாது. 100 பேரில் சோதனை செய்தால் 1க்கும் குறைவானவருக்கே தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கரூர், திருப்பூர் 1.4 என்கிற அளவில் பரவல் உள்ளது.

    Also Read : தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

    மாநில எல்லையில் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலை முழுமையாக கடைபிடிக்கிறோம். தொற்று பாதித்த நபர்களை Contact tracing எடுத்து வருகிறோம். அவருடன் தொடர்புடைய நபர்களையும் கண்காணிக்கிறோம்.

    தமிழகத்தில் தான் 314 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில் 12 ஆய்வகங்களில் மரபணு சோதனை செய்யப்படுகிறது. டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை. அது தான் தற்போது அதிகரித்து வருகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும். 638 பேர் டெங்கு சிகிச்சை மாநிலம் முழுவதும் பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி