Home /News /tamil-nadu /

ஒமைக்ரான் பாதிப்பு.. தமிழகத்தில் அச்சப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் பாதிப்பு.. தமிழகத்தில் அச்சப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவை தொடர்ந்து வைரஸ் பல வகைகளில் உருமாறி கொண்டே இருக்கின்றது இவற்றை கண்டறிய மரபணு பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து வைரஸ் பல வகைகளில் உருமாறி கொண்டே இருக்கின்றது இவற்றை கண்டறிய மரபணு பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து வைரஸ் பல வகைகளில் உருமாறி கொண்டே இருக்கின்றது இவற்றை கண்டறிய மரபணு பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் நாம் பதட்டமோ, அச்சமோ அடைய தேவையில்லை என மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பி்ரமணியன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஒமைக்ரான் வைரஸ் தடுப்புக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்  குறித்த ஆய்விற்கு பின்னர் விமான நிலைய வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஒமைக்ரான் வைரஸ் என பெயரிடுவதற்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை எப்படி கையாள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்த அவர், அதன் பின்னரே இந்த காய்ச்சலுக்கு ஒமைக்ரான் என பெயர் வைக்கப்பட்டது என தெரிவித்தார். உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர், தற்போது பெங்களுரில் இருவருக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களில் Mass Screening மூலம் உடல் வெப்பத்தை வைத்து தொற்றை கண்டறியும் கருவி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா உட்பட பாதிப்பு இருக்கும் 13 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்படுகின்றது எனவும், விமான நிலையத்தில் ஆய்வில் பாசிட்டிவ் வந்துவிட்டால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்படுவார்கள் எனவும், தொற்று கண்டறியப்பட்டால்  வீடுகளுக்கு பயணிகள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவித்தார்.

High risk நாடுகளில் இருந்து வந்தவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர்,  அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்த அவர், ரேண்டம் ஆர்டிபிசிஆர் சோதனை 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தார். விமானத்தில் வருபவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தால் அவர்களுக்கும் அரசின் சார்பில் இலவச ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகின்றது எனவும்  தெரிவித்தார். இதுவரை 4 பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1,807 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு  இல்லை என தெரிவித்த அவர், கர்நாடாகவிற்கு ஒமைக்ரான் பாதிப்பு  வந்து இருப்பதால் நாம்  பதட்டமோ, அச்சமோ அடைய தேவையில்லை என தெரிவித்தார்.

இந்தியாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்... 2 பேருக்கு பாதிப்பு உறுதி


 கொரோனாவை தொடர்ந்து வைரஸ் பல வகைகளில்  உருமாறி கொண்டே இருக்கின்றது என தெரிவித்த அவர், இவற்றை கண்டறிய மரபணு பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியடெல்டா வைரஸ்யே இந்த அரசு சந்தித்து விட்டது என கூறிய அவர்,ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகளை இந்த அரசால் எளிதாக  எதிர்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


ஆட்சிக்கு வந்த பின்னர் கூடுதல் கட்டமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது எனவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்த அவர்,பதட்டமான சூழல் தற்போது இலலை எனவும், மத்திய அரசு என்ன விதிமுறைகள் சொல்கின்றனரோ அதை நாம் கடைபிடிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Covid-19, Omicron

அடுத்த செய்தி