Home /News /tamil-nadu /

ஓமைக்ரான் பரவல்: தமிழகம் வருகிறது மத்திய குழு

ஓமைக்ரான் பரவல்: தமிழகம் வருகிறது மத்திய குழு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 108 ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளன, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 38, கேரளா 37, தமிழ்நாட்டில் 34 மற்றும் கர்நாடகாவில் 31தொற்று பதிவாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில்,தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு  மத்திய குழு விரைகிறது.

    இந்தியாவில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று இரட்டிபாகும் காலம் 1.5 நாளாக உள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 108 ஓமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளன, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 38, கேரளா 37, தமிழ்நாட்டில் 34 மற்றும் கர்நாடகாவில் 31தொற்று பதிவாகியுள்ளன.

    கொரோனா பரவல் காரணமாக, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மேலும் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: ஓமைக்ரான் பரவல் எதிரொலி... இந்தியாவின் 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு!


    இதேபோல், தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம்,  மிசோரம், கர்நாடகா,  பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.

    இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று ஓமைக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தவரும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக உள்ளவருமான  ஏஞ்சலிக் கோட்ஸி (angelique coetzee) கூறியுள்ளார். எனினும் பாதிப்பு குறைந்த அளவில்தான் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

    மேலும் படிக்க: மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டிய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

    ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக சர்வதேச அளவில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கான 4,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Central Team, Omicron, Union Govt

    அடுத்த செய்தி