• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எண்ணெய், தயிர், பால் பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடையா?

எண்ணெய், தயிர், பால் பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடையா?

ஆவின் பால் (கோப்புப் படம்)

ஆவின் பால் (கோப்புப் படம்)

  • Share this:
    எண்ணெய் பாக்கெட், பால் பாக்கெட், தயிர் பாக்கெட் போன்ற சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடை விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தமிழக சுற்றுச்சூழல் துறை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

    தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்தது. இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

    எஸ். வைத்தியநாதன், பிடி ஆஷா ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகச் சுற்றுசூழல் , வனத்துறை முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோரிகர் தாக்கல் செய்தல் பதில் மனுவில் “பால், தயிர், எண்ணெய் பாக்கெட் போன்ற சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்தது. எனவே அதன் விலக்கை ரத்து செய்து தடை விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீதிபதிகள் பேசியபோது “ இந்த தடையை ஆவின் பால் பாக்கெட்டிலிருந்து தொடங்க வேண்டும். திரையரங்குகள், மக்கள் கூடும் பொது வெளிகளில் பிளாஸ்டிக் ஆபத்து குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கை வேறு ஏதேனும் மாறு வழியில் பயன்படுத்துவது குறித்து யோசனை செய்யலாம். இதுகுறித்து மாணவர்களிடமும் ஆலோசனைப் பெறலாம் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: