ஆசைக்கு மறுத்த மூதாட்டி.. அடித்துக் கொன்ற இளைஞர் கைது.. சிசிடிவி வீடியோ வெளியீடு

Youtube Video

சென்னை அடுத்த திருவொற்றியூரில் ஆசைக்கு இணங்க மறுத்த 65 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

 • Share this:
  65 வயது மூதாட்டியை அடித்துக் கொன்ற கொடுரன், 32 வயதான ஜெயக்குமார். குடிபோதையில் பாட்டியிடம் தகாத முறையில் நடந்ததோடு மட்டுமின்றி கொலையும் செய்துள்ளார்.

  சென்னையடுத்த திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைனைச் சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி கிருஷ்ணவேணி. மகன் சசிக்குமாருடன் வசித்தார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் தினமும் படுத்து உறங்குவார். அதேபோன்று கடந்த 12 ஆம் தேதி இரவு மருத்துவமனை வளாகத்தில் படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவு மூதாட்டி அருகே மதுபோதையில் வந்த மர்ம நபர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

  கண்விழித்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி போதை ஆசாமியை அடித்து துரத்தி விட்டார். ஆத்திரமடைந்த போதை இளைஞர் அருகில் இருந்த நடைபாதை கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் போட்டுவிட்டு தப்பி விட்டார். விடியற்காலை சாலையில் சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  ஆனால் ,சிகிச்சை பலனின்றி மறுநாளே மூதாட்டி உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். அந்தபகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், சம்பவத்தன்று மூதாட்டியை யாரோ ஒரு நபர் தாக்கி விட்டு அருகில் இருந்த லாரி ஒன்றில் ஏறி தப்பித்து செல்வது பதிவாகியிருந்தது.

  லாரியின் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில் எண்ணூர் சத்தியமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த 32 வயதான ஜெயக்குமார் என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபோதையில் மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதையும் அதற்கு மூதாட்டி மறுக்கவே ,அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.

  மேலும் படிக்க...திருவள்ளூர்: தற்காப்புக்காக கொலை செய்ததாக பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி புகார்

  இதை தொடர்ந்து ஜெயகுமாரை கைது செய்த போலீசார் இவர்மீது வெறெதுவும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதோடு அவரை கொலையும் செய்த நபர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: