தமிழகத்தில் நீட் தேர்வில் பழைய மாணவர்களே ஆதிக்கம்! நடப்பாண்டு மாணவர்களுக்கு பாதிப்பு?

சென்னை அனகாபுத்தூரில் அரசுப் பள்ளியில் பயின்ற ஜீவிதா, 2018-ம் ஆண்டில் நீட் தேர்வில் 361 மதிப்பெண்கள் பெற்று 4 மதிப்பெண்களில் மருத்துவம் இடம் கிடைக்காமல் போனாலும், விடாபடியாக ஓராண்டு படித்து இம்முறை 605 மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்கவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் பழைய மாணவர்களே ஆதிக்கம்! நடப்பாண்டு மாணவர்களுக்கு பாதிப்பு?
நீட் தேர்வு
  • News18
  • Last Updated: June 12, 2019, 9:46 AM IST
  • Share this:
தமிழகத்தில் நீட் தேர்வில் 300-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற 60 விழுக்காட்டினர் ஏற்கெனவே சில முறை தேர்வு எழுதியவர்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 300-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த 14 ஆயிரத்து 443 பேரில் 8 ஆயிரத்து 688 பேர், அதாவது 60 விழுக்காட்டினர் ஏற்கெனவே சில முறை நீட் தேர்வை எழுதிய பழைய மாணவர்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எஞ்சிய 5 ஆயிரத்து 755 பேர் மட்டுமே இந்த ஆண்டிலேயே பனிரெண்டாம் வகுப்பை முடித்து நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2018-ம் ஆண்டில் ஆயிரத்து 344 பேர் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 10 பேர் மட்டுமே 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். நடப்பாண்டு 14 ஆயிரத்து 443 பேரில் 300-க்கு மேல் பெற்றுள்ளனர்.


இவர்களில் 2 ஆயிரத்து 583 மாணவர்கள் இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். அதில், 3 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள். 29 மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள். இவர்களில் எஸ்.சி. பிரிவில் 4 மாணவர்கள் 300-க்கு மேல் பெற்றுள்ள நிலையில், இவர்களுக்கும் இந்தாண்டு மருத்துவ இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

குறிப்பாக, கடந்தாண்டு தேர்வு எழுதியவர்கள் 300 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற நிலையில், இந்தாண்டு இரண்டாவது முறையாக தேர்வு எழுதி 500 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். சென்னை அனகாபுத்தூரில் அரசுப் பள்ளியில் பயின்ற ஜீவிதா, 2018-ம் ஆண்டில் நீட் தேர்வில் 361 மதிப்பெண்கள் பெற்று 4 மதிப்பெண்களில் மருத்துவம் இடம் கிடைக்காமல் போனாலும், விடாபடியாக ஓராண்டு படித்து இம்முறை 605 மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்கவாய்ப்புள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2 ஆயிரத்து 447 இடங்களில், ஆயிரத்து 277 இடங்களை பழைய மாணவர்கள் நிரப்பினர் என சுட்டிக்காட்டியுள்ள வல்லுநர்கள், அந்த வகையில் நடப்பாண்டு, 2 ஆயிரத்து 800 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கை, பழைய மாணவர்கள் நிரப்புவர் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.Also see:

First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading