சேலத்தில் 78 வயது முதியவரை கைகளைக் கட்டிப்போட்டு 5 மணி நேரம் குளிர்பதன சவப்பெட்டியில் வைத்த குடும்பத்தினர்

சேலத்தில், உயிரோடு இருந்த முதியவரை, அவரது சகோதரர், குளிர்பதன வசதியுள்ள சவப் பெட்டியில் 5 மணிநேரம் வைத்திருந்த கொடூரம் நடந்துள்ளது. இதில் 2 பிரிவுகளின் கீழ் சகோதரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
சேலம் மாநகராட்சி 24 வது கோட்டம், கந்தம்பட்டியில் பழைய ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார்.  இவர் தனது சகோதரர் 70 வயதான சரவணன், சகோதரியின் மகள்கள் கீதா மற்றும் வாய் பேச முடியாத ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறார். கீதா உடல்நிலை பாதிப்பால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலசுப்ரமணிய குமார் இறந்து விட்டதாகக் கூறி, திங்களன்று குளிர்சாதன சவப்பெட்டி வாடகைக்கு தரும் நிறுவனத்திடம் சகோதரர் சரவணன் தகவல் அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் சவப்பெட்டியை வீட்டில் வைத்து விட்டு செவ்வாய்க்கிழமை மதியம் வருவதாகக் கூறிச் சென்றனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை மதியம், சரவணன் வீட்டிற்கு சென்றபோது அங்கு குளிர்சாதன சவப்பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணிய குமார் உடல் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்; அவர் கைகள் கட்டப்பட்டிருந்தன.

முதியவரை உயிருடன் ஏன் சவப்பெட்டியில் வைத்தீர்கள் என அவர்கள் கேள்வி கேட்டபோது சரவணன், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.


பின்னர் 108 ஆம்புலன்சிற்கும் போலீசாருக்கும் ஊழியர்கள் தகவல் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் வந்தபின் அதன் ஊழியர்கள் முதியவரைமீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


முதியவரை அவரது சகோதரர் சரவணன் ஏன் 5 மணிநேரம் குளிர்சாதன சவப்பெட்டிக்குள் வைத்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உடல்நலம் பாதித்த முதியவரை குளிர்சாதன சவப்பெட்டிக்குள் வைத்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading