ரேஷனில் அரிசி வாங்க 80 கி.மீ சைக்கிளில் பயணித்த முதியவர் - சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்

ரேஷனில் அரிசி வாங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் சென்றவர் நடுரோட்டில் பரிதாபமாக மயங்கி விழுந்தார்.

ரேஷனில் அரிசி வாங்க 80 கி.மீ சைக்கிளில் பயணித்த முதியவர் - சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்
செல்லதுரை
  • Share this:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குலாலர் தெருவைச் சேர்ந்தவர் 59 வயதான செல்லதுரை. மதுரை தேனி சாலையில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனியில் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த செல்லத்துரை குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வேலை இல்லாமல் உணவிற்கே தவித்து வந்த செல்லத்துரைக்கு கொரோனா காரணமாக மதுரை மாவட்ட மக்களுக்கு ரேஷனில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் செய்தி தெரியவந்தது.

போக்குவரத்து வசதிகள் இல்லாததால் சைக்கிளிலேயே 80 கிலோமீட்டர் பயணம் செய்து இவர் திருமங்கலத்தை வந்தடைந்தார். அப்போது தான் பசி காரணமாக சாலையில் மயங்கி விழுந்தார்.


Also read... வேதியியல் தேர்வில் 5 மதிப்பெண் தான் பெற்றேன் - மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

அருகிலிருந்தவர்கள் உதவியால் மயக்கம் தெளிந்த செல்லத்துரை தனக்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

வழக்கறிஞரின் காரில் ரேஷன் கடைக்கு சென்ற செல்லத்துரைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரிசி சர்க்கரை மட்டும் வழங்கிய ரேஷன் ஊழியர்கள் உதவித்தொகையை கடந்த மாதமே கொடுத்து முடித்து விட்டதாக தெரிவித்தனர்.கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, உதவித்தொகைக்காக 80 கிலோமீட்டர் சைக்கிளில் வந்தும் அது கிடைக்காமல் கையறு கதியில் நின்ற செல்லத்துரையின் நிலை அங்கிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அடுத்த வேலை உணவிற்கு வழியில்லாமல் தவிக்கும் செல்லத்துரையின் நிலை கொரோனாவை விட கொடூரமானது. இவருக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading