வங்கி கடன் வசூல் ஏஜென்ட் கொடுத்த டார்ச்சரால் முதியவர் தற்கொலை

Youtube Video

சென்னையில் வங்கி மற்றும் கிரெடிட் கார்டுகளில் வாங்கிய 6 லட்சம் ரூபாய் கடனுக்காக, வசூல் ஏஜெண்டுகள் கொடுத்த தொந்தரவு தாங்க முடியாத தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:


  கொரோனா காலகட்டத்தில் வங்கிக் கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் தவித்த வசந்தகுமார் என்ற முதியவர், வசூல் ஏஜெண்டுகளின் வார்த்தைகளைத் தாங்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். 

  சென்னை பெரவள்ளுர் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் 59 வயதான வசந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மகளுக்குத் திருமணமான நிலையில், மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இவர் இரண்டு வங்கிகளின் கடன் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் ஒரு வங்கியில் தனிநபர் கடனும் வாங்கியுள்ளார். அந்த வகையில் வசந்தகுமாருக்கு மொத்தம் 6 லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால், கடன் தவணை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார் வசந்தகுமார். இந்த நிலையில் வசூல் ஏஜெண்டுகள் தவணையை உடனடியாக செலுத்தும்படி அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

  வசந்தகுமார் தனது குடும்ப நிலையை எடுத்துக் கூறியும் அவர்களது தொல்லை நிற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார் வசந்தகுமார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் படுக்கையில் படுத்திருந்த வசந்தகுமார் திடீரென எழுந்து சென்றார். சிறிதுநேரம் கழித்து மனைவி அவரைத் தேடிய போது சமையலறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

  மேலும் படிக்க...டிகளை செட்டப் செய்து தாக்குதல் நாடகமாடிய திமுக பிரமுகர் கைது

  பெரவள்ளூர் போலீசார் வசந்தகுமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வங்கி வசூல் ஏஜெண்டுகள், வசந்தகுமாருக்கு எவ்விதத்தில் தொல்லை கொடுத்தனர் என்பது குறி்தத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: