பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை!

பாஜகவுக்கு ஓட்டு கேட்ட முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18
Updated: April 15, 2019, 3:08 PM IST
பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை!
கொல்லப்பட்ட கோவிந்தராஜ்
news18
Updated: April 15, 2019, 3:08 PM IST
பாஜகவிற்கு ஆதரவாக கழுத்தில் மோடியின் படத்தை மாட்டிக்கொண்டு ஓட்டு கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரத்தநாடு அண்ணா சிலை பகுதி அருகே பிரதமர் மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு தனியாக நின்றவாறு வாக்கு சேகரித்துள்ளார்.

அங்கு வந்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் முதியவர் கோவிந்தராஜை சரமாரியாக தாக்கி விட்டு கோபிநாத் தப்பி ஓடி விட்டார்.

படுகாயமடைந்த கோவிந்தராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதில் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கைதான கோபிநாத்
Loading...
இக்கொலை தொடர்பாக ஒரத்தநாடு காவல்துறையினர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவுக்கு ஓட்டு கேட்ட முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...