Home /News /tamil-nadu /

பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பணம் சேர்த்த மூதாட்டிகளில் ஒருவர் உயிரிழப்பு...!

பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பணம் சேர்த்த மூதாட்டிகளில் ஒருவர் உயிரிழப்பு...!

உயிரிழந்த ரங்கம்மாள் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்)

உயிரிழந்த ரங்கம்மாள் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்)

திருப்பூரில் பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை சேர்த்த சகோதரிகளில் ஒருவரான ரங்கம்மாள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது பூமலூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள்(75), தங்கம்மாள்(78). இருவரும் சகோதரிகள். இருவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் மரணடைந்து விட்டனர். இதனால், தங்களது மகன்கள் வீட்டில் மூதாட்டிகள் இரண்டு பேரும் வசித்து வருகின்றனர்

இருவருக்கும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் அவ்வப்போது மகன்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே மேல்சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. மகன்கள் பெரிய அளவில் பணம் இல்லாமல் தவித்துள்ளனர். அப்போது தான் மூதாட்டி இருவரும் தாங்கள் பணம் சேர்த்து வைத்திருப்பதாக கூறியிருக்கின்றனர். அதை எடுத்து வந்து கொடுத்தபோது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ,1000 ரூபாய் நோட்டுகளை மூதாட்டிகள் சேர்த்து வைத்திருந்தனர். ரங்கம்மாள் 24 ஆயிரமும், தங்கம்மாள் 22 ஆயிரம் என 46 ஆயிரம் ரூபாயை செல்லாத நோட்டுகள் என அறியாமல் இரண்டு பேரும் பாதுகாத்து வைத்துள்ளனர். மகன்கள் அவர்களிடம் இந்த நோட்டுகள் செல்லாது என்று கூறிய போது இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ஆண்டுகளாக சிறு சிறுக பேரன், பேத்திகளுக்காக சேர்த்து வைத்திருப்பதாகவும், அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விபரம் தங்களுக்கு தெரியாது என்று கூறி வேதனை அடைந்தனர்.

இதனை அறிந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், இருவரும் முதியோர் ஓய்வூதியத் தொகைக்கு விண்ணப்பித்ததை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்க வழி செய்தார். மேலும், முதியவர்களுக்கு சென்னையை சேர்ந்த அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் வழங்கியது.

இந்நிலையில் பெருந்துறை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.
Published by:Sankar
First published:

Tags: Tiruppur

அடுத்த செய்தி