தண்ணீர் என நினைத்து ஆசிட்டைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு - சென்னை அருகே பரிதாபம்

தண்ணீர் என நினைத்து ஆசிட்டைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு - சென்னை அருகே பரிதாபம்

கோப்புப்படம்

சென்னையை ஒட்டிய திருமுல்லைவாயல் அருகே தண்ணீர் என நினைத்து தண்ணீர் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த ஆசிட் குடித்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

  • Share this:
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமதி. இவர்களுடன் தாயார் மேனகாவும் வசித்துவருகிறார். அவருக்கு வயது60. இந்நிலையில் தாயாருக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சாப்பிட்டு விட்டு சர்க்கரை மாத்திரை போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் என நினைத்து  குடித்துள்ளார். இதையடுத்து மேனகா நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உதவிக்காக அலறி துடித்துள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மேனகா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: