தஞ்சாவூரில் பொட்டு என்ற மூதாட்டியின் ஓட்டை யாரோ போட்டு விட்டதால் அவர் வாக்களிக்க முடியாமல் போனது. அதனால் அந்த மூதாட்டி வாக்குச்சாவடிக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் பொட்டு என்கிற மூதாட்டி இன்று வாக்கு அளிக்க வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது அதிகாரிகள் நீங்கள் ஓட்டு போட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன ஆனால் ஏன் என்னால் வாக்களிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அதிகாரிகள் ஏற்கனவே உங்கள் ஓட்டு பதிவாகி விட்டதால் இனி ஓட்டு போட முடியாது என தெரிவித்தனர். இதனால் கோபமடந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடி மையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுப்பாட்டார்.
சமீபத்தில் தமிழில் வெளியான சர்கார் படத்தில் நடிகர் விஜயும் இப்படி ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.