நோயால் பாதிக்கப்பட்ட வயதான யானை... தீவிர சிகிச்சை அளித்து வரும் வனத்துறையினர்

யானை

யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்துகள் வைத்து, கண்காணித்து வருகின்றனர்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயது பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக அப்பகுதியின் வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இதனைதொடர்ந்து அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்தினர் யானையை கண்காணித்த போது, யானையின் பிறப்புறுப்பில் புண் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் விரைந்து வந்த கால்நடைத்துறையினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்துகள் வைத்து, கண்காணித்து வருகின்றனர்.



    இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானை பிடிக்கப்பட்டு முதுமலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 27 வயது மதிக்கதக்க இந்த யானைக்கு, வால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சோர்வுற்ற நிலையில் கூடலூர் பகுதியில் உலா வந்தது. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தாமலே, கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர், முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு மரக்கூண்டில் அடைத்து, நாள் தோறும் காலை, மாலையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கூண்டுக்குள் உள்ள யானையை தொடர்ந்து கவனித்து வருவதுடன், உணவு மூலமாக மருந்து, மாத்திரைகள் வைத்து வழங்கப்பட்டு வருகின்றன.
    Published by:Sankaravadivoo G
    First published: