Bus Pass : விருப்பம்போல் பயணம் செய்ய 1000 ரூபாய் பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம்

மாநகரப் பேருந்து

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மே, ஜூன் மாதங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

  • Share this:
    சென்னை மாநகர பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1000 பஸ் பாஸ் வழங்கும் காலக் கெடு இம்மாதம் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே மாதம் பயணம் செய்ய வாங்கிய பழைய பஸ் பாஸையே ஜூலை 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என மாநகர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர 1000 ரூபாய் பஸ் பாஸ் சென்னையில் 29 மையங்களில் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மே, ஜூன் மாதங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், கடந்த மாதம் பேருந்துகள் ஓடாததால் அப்போது பயன்படுத்தாத பஸ் பாஸை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், பஸ் பாஸ் வாங்காதவர்கள் வசதிக்காக தற்போது 1000 ரூபாய் பஸ் பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாஸ் விநியோகத்தின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. அதனை ஏற்று அதன் கால அவகாசத்தை வருகிற 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதால் இந்த பயண அட்டையினை பெற்றுக்கொண்டு அடுத்த மாதம் (ஜூலை 15ஆம் தேதி வரை) பயணம் செய்யலாம்.

    Must Read : என் தலைமையில் செயல்பட்டிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் - சசிகலா

    மேலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்திட மாதாந்திர பஸ் பாஸ் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த மே மாதம் பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பஸ் பாஸை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்திட அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: