செல்லாத நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு ரூ.46 ஆயிரம் செக் வழங்கிய அறக்கட்டளை!

செல்லாத நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு ரூ.46 ஆயிரம் செக் வழங்கிய அறக்கட்டளை!
  • News18
  • Last Updated: December 2, 2019, 10:27 PM IST
  • Share this:
பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் சென்று வழங்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள், தங்கம்மாள் சகோதரிகள் இருவருக்கும் 75 வயதான நிலையில் கணவர்கள் இல்லை. இருவரும் தத்தம் மகன்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துமனைக்கு அழைத்து சென்று மகன்கள் சிகிச்சை அளித்து வந்திருக்கின்றனர். சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாததால் தாயாரிடம் ஏதேனும் பணம் உள்ளதா என கேட்க. தாங்கள் சேமித்து வைத்திருந்த 46,000 ரூபாய் பணத்தை மகன்களிடம் கொடுத்துள்ளனர்.


அவை அனைத்தும் பணமதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்பதைக் கண்டு மகன்கள் அதிர்ச்சியடைந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்த 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதுபற்றித் தெரியாமல் மூதாட்டிகள் பணம் சேர்த்து வைத்திருந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் முதியவர்களின் மருத்துவச் செலவு மற்றும் உதவித்தொகைக்கான ஆணையைப் பிறப்பித்தார். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த எவர்வின் பள்ளி அறக்கட்டளையின் தாளாளர் புருஷோத்தமன், முதியவர்களிடம் 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Also see:
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading