இறப்பில் கூட பிரியக்கூடாது என தற்கொலை செய்துகொண்ட தம்பதி

வயதான காலத்திலும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதியினர் இறப்பிலும் பிரிந்து விடக்கூடாது என்று விசம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.

இறப்பில் கூட பிரியக்கூடாது என தற்கொலை செய்துகொண்ட தம்பதி
உயிரிழந்த தம்பதி
  • Share this:
சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச்  சேர்ந்தவர் மீன்வியாபாரி முல்லர்அருள்சாமி (75) அவரது மனைவி  பாக்கியவதியுடன்(65) மன்னன் தெருவில் தனியாக வசித்து வருகிறார்.

இவர்களுக்கு சாமுவேல், மார்ட்டின் ஆகிய இரண்டு மகன்கள் பத்மாவதி என்ற மகள் உள்ளனர். இரண்டு மகன்களும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மகளுக்கு அருகிலுள்ள நெய்தவாசல்  கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், பாக்கியவதி கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். அவரது மகன்கள் சென்னையில் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.


இந்நிலையில் பாக்கியவதியும் அவரது கணவர் முல்லர் அருள்சாமியும் விஷமருந்தி வீட்டிலேயே கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த அவரது மருமகன் சசி அவர்களை காப்பாற்ற சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி பாக்கியத்திற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்துள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




தனக்கு முன்பு இறந்து விடுவாரோ என்ற எண்ணத்தில் மனைவியை பிரிய மனமில்லாமல் தனிமையில் இருந்த இருவரும் விஷமருந்தி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வயதான காலத்திலும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதியினர் இறப்பிலும் பிரிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில்  விஷமருந்தி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading