கூடுதலாக ரூ.70 கொடு.. கார் கதவை மூடி பயணியை மிரட்டிய ஓலா ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ

Youtube Video

அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் ஓலா கேப் சர்வீஸ் கார் ஒன்றில் கூடுதல் கட்டணம் கேட்டு ஓட்டுநர் மிரட்டும் பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Share this:
    கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுபோக்குவரத்து குறைந்து ஆட்டோ, வாடகை கார் புழக்கமும் குறைந்துள்ளது. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா போன்ற தனியார் வாகன சேவைகளை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில ஓலா வாகன ஓட்டுநர்கள் அடாவடியாக கூடுதல் கட்டணத்தை வாங்கிவருகின்றனர். சென்னை துரைபாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை வரை அவசர தேவைக்காக மருத்துமனைக்கு சென்றவரிடம், ஓலா ஓட்டுநர் ஒருவர் கூடுதல் கட்டணம் கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    152 ரூபாய் கட்டணத்திற்கு கூடுதலாக 70 ரூபாய் கேட்டுள்ளார் ஓட்டுநர். ஏன் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று பயணி கேட்டது தான் தாமதம். உடனே கெட்ட கெட்ட வார்த்தைகளால் வசைமாரி பாட தொடங்கியுள்ளார் ஓட்டுநர்.

    அத்துடன் ஓலாவில் இப்படி தான் பயணித்த தொகைக்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும். இது தெரியாமல் ஓலாவில் புக் பன்றவன்லாம் பயித்திய காரர்கள் தான் என்று அடாவடியாக பதில் கொடுத்துள்ளார்.

    வாகனத்தில் வந்த பயணியை "ரொம்ப பேசாத" என்று கூறிய ஓட்டுநர், இறக்கி விட முடியாது என்று கதவை திறக்க விடாமல் அச்சுறுத்தியதாகத் தெரிகிறது.

    இதையடுத்து பயணி கூடுதலாக கட்டணத்தை கொடுத்துவிட்டு தப்பித்து பிழைத்து வந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓலா நிறுவனத்திடம் முறையிட்டதாகவும், ஆனால் எந்த பதிலும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட முரளி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோன்று, ஊரடங்கை பயன்படுத்தி சில ஓலா ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதாகவும், பாதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் தொடர்புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன.
    Published by:Karthick S
    First published: