489 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் எண்ணெய் நிறுவனங்கள்! கொந்தளிப்பில் விவசாயிகள்

தமிழ்நாட்டில் மட்டும் 1984ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன.

489 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் எண்ணெய் நிறுவனங்கள்! கொந்தளிப்பில் விவசாயிகள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 5:11 PM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டில் மட்டும் 489 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.

1984-ஆம் ஆண்டலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 768 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திறந்தவெளி அனுமதிக் கொள்கையைக் கொண்டு வந்தது. இந்தக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏல அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் வேதாந்தா 274 கிணறுகளுக்கும், ஒ.என்.ஜி.சி. 215 கிணறுகளுக்கும் விண்ணப்பம் செய்துள்ளன.

இந்த எண்ணிக்கையானது கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கையில் பாதிக்குமேல் ஆகும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து நாம் பெற்ற தகவலின் அடிப்படையில்


தமிழ்நாட்டில் மட்டும் 1984ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 187 கிணறுகள் செயல்பட்டு வருகின்றன.

திருவாரூரில் 78

நாகப்பட்டினத்தில் 57

Loading...

தஞ்சாவூரில் 12

கடலூரில் 4

அரியலூரில் 1

ராமநாதபுரத்தில் 35

என மொத்தமாக 187 கிணறுகள் தற்சமயம் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாக பொய்த்துவரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் முயன்று வருவது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...