Home /News /tamil-nadu /

பல்லாவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் காலி செய்ய சொன்னதால் பரபரப்பு

பல்லாவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் காலி செய்ய சொன்னதால் பரபரப்பு

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பல்லாவரம் காவல் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக,முதல் கட்டமாக மின்விநியோகத்தை நிறுத்த வருகை தந்தனர்.

    பல்லாவரம் அருகே இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் காலி செய்ய சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதியான சிவசக்தி நகர், ஜெ.ஜெ.நகர், சாந்தி நகர், அம்மன் நகர், ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35வருடங்களாக வீடு கட்டி வசித்து வரும் இடங்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தையும் காலி செய்ய சொல்லி, கடந்த இரு தினங்களுக்கு முன்,அப்பகுதி பொதுமக்களுக்கு அரசு சார்பில் அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர். முதற்கட்டமாக 25 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பல்லாவரம் காவல் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக,முதல் கட்டமாக மின்விநியோகத்தை நிறுத்த வருகை தந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தாங்கள் 35 வருடத்திற்கு மேல் இதே இடத்தில் குடியிருந்து வருவதாகவும், தொடர்ந்து தாங்கள் இதே இடத்தில் வசிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள்,அரசு நிர்ணயிக்கும் வரியை காஞ்சிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் முறையாக கட்டி குடியிருக்கவும், மாறாக வரி கட்டாத குடியிருப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    Also Read: அதிமுக-வில் தலைமையே கிடையாது - பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ..

    அதனையேற்று,பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் கூட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Pallavaram

    அடுத்த செய்தி