ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீன்களில் ரசாயனம் கலப்பா? சோதனை நடத்திய அதிகாரிகள்

மீன்களில் ரசாயனம் கலப்பா? சோதனை நடத்திய அதிகாரிகள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் மீன்களில் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

மீன்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக பார்மலின் என்ற ரசாயனம் கலப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவ்வாறு, ரசாயனம் செலுத்தப்பட்ட மீன்களை உட்கொண்டால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம், காசிமேடு, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை, சோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், மீன்களில் எந்தவிதமான ரசாயன பொருளும் கலப்படம் செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி மீன்களை வாங்கலாம் எனவும் அதிகாரிகள் கூறினர்.

Also see:

First published:

Tags: Fish