• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வருமானத்தை விட 654% கூடுதல் சொத்து.. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு!

வருமானத்தை விட 654% கூடுதல் சொத்து.. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு!

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    திருப்பத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் தந்தை, கே.கே.சின்னராசு பீடி கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவருக்கு பின்னால் அவர்களது மகனான கே.சி.வீரமணி, தனது சகோதரர்கள், கே.சிஅழகிரி மற்றும் கே.சி.காமராஜ் உடன் இணைந்து அந்த பீடி கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.

    அத்துடன் அகல்யா டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில், டிப்பர் லாரி கம்பெனியையும் இவர் நடத்தி வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மற்றும் 2021 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் அதிக அளவில் மாற்றமடைந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி, 2016-ம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் கே.சி.வீரமணி மற்றும் அவர் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு 25 கோடியே 99 லட்சமாகும். அதேசமயம் 2021 பிரமாணப் பத்திரத்தின்படி சொத்து மதிப்பு 56 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.

    2016 ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31 வரையிலான இவரது வருமானம் 4 கோடியே 39 லட்சம் எனவும், அதே காலகட்டத்தில் செலவினம் 2 கோடியே 56 லட்சமாக இருந்துள்ளது. இதன்படி பார்க்கும் போது அவரது சேமிப்பு 1 கோடியே 83 லட்சமாக இருக்க வேண்டும்.

    ஆனால், 28 கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாய் இவர் பேரிலும், குடும்பத்தினர் பேரிலும் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தனது வருமானத்தை விட 654 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சொத்துகள் தன் பெயரிலும், 80 வயதான தனது தாயார் பெயரிலும் அவர் வாங்கியுள்ளார். தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கே.சி.வீரமணி வாங்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: