Home /News /tamil-nadu /

தாய் இறந்ததால் வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்த மகன்... மகனே இறந்ததாக சான்றிதழ் அளித்த அதிகாரிகள்...!

தாய் இறந்ததால் வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்த மகன்... மகனே இறந்ததாக சான்றிதழ் அளித்த அதிகாரிகள்...!

  • News18
  • Last Updated :
    நாகை அருகே தாய் இறந்ததால் வாரிசு சான்று கேட்டு மகன் விண்ணப்பித்த நிலையில், மகனே இறந்ததாக அதிகாரிகள் சான்று கொடுத்த அவலம் நடந்துள்ளது.

    நாகை மாவட்டம் தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் தாய் கடந்த மாதம் இறந்திருக்கிறார். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ராதிகாவிடம் ராஜா விண்ணப்பித்திருக்கிறார்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் ராதிகா, வேதாரண்யம் வருவாய் ஆய்வாளர் ஸ்டேலிராஜ், வேதாரண்யம் வட்டாட்சியர் என 3 வருவாய்துறை அதிகாரிகளும் கையொப்பமிட்டு தாய் அச்சம்மாளுக்கு பதிலாக மகன் ராஜா உயிரிழந்ததாக கூறி வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.



    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, மீண்டும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Nagai

    அடுத்த செய்தி