ஓட்டுக்கு பணமா...? இதோ நாங்கள் வருகிறோம்!

ஓட்டுக்கு பணமா...? இதோ நாங்கள் வருகிறோம்!

மாதிரிப் படம்

பணப்பட்டுவாடாவுக்கு வாய்ப்புள்ள தொகுதிகளாக தமிழகத்தில் உள்ள 118 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன..

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிக பணப்பட்டுவாடாவுக்கு வாய்ப்புள்ள தொகுதிகளாக தமிழகத்தில் உள்ள 118 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை கண்காணிக்க 118 செலவினப் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

  சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தமாக 272 தொகுதிகளில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றுள் தமிழகத்தில் மட்டும் 118 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

  இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தலா ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அவர்கள் வேட்பாளர்களின் செலவினங்கள் மற்றும் பணப்பட்டுவாடா தடுப்பு பணிகளின் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவை தொகுதிகளை கண்காணிக்க 118 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் இன்று தமிழகம் வருகின்றனர். 150 தேர்தல் பொதுப் பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் வரும் 19-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளனர்” என்றார்.

  Must Read : தமிழகத்தில் 118 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் - தேர்தல் ஆணையம்

   

  ஓட்டுக்கு பணமா அதைத் தடுக்க  இதோ நாங்கள் வருகிறோம் என்பதைப் போல வருகை தரும் அதிகாரிகள், பணப்பட்டுவாடா நடைபெறாமல் கண்காணித்து தடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
  Published by:Suresh V
  First published: