• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பார்த்து 3 நாள் ஆச்சு.. புலிக்கும் பசிக்கும்தானே.. வழி மேல் விழி காத்திருக்கும் வனத்துறை

பார்த்து 3 நாள் ஆச்சு.. புலிக்கும் பசிக்கும்தானே.. வழி மேல் விழி காத்திருக்கும் வனத்துறை

புலி

புலி

நீலகிரி வனத்துறையினர் நேரடியாக T23 புலியை பார்த்து 3 நாட்களாகிவிட்டதாகவும், புலி பதுங்கி இருந்தாலும் 3 நாட்களுக்கு பின்னர் உணவிற்காக வெளியில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் T23 புலியை பிடிக்கும் பணி தொடர்பாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று மாலை வரை T23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்பதால் இன்று காலை முதல் புலி நடமாட்டம் இருக்கும் வனப்பகுதிகளில் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள. புலி இருப்பதாக கணிக்கப்படும் பகுதியில் 6 கேமரா இருந்த நிலையில் தற்போது 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புலியை கண்டறிய இது தான் சிறப்பானதாக இருக்கும் என கூறிய அவர் வனங்களில் உள்ள புதர்கள், பள்ளங்கள் ஆகியவற்றை வன ஊழியர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

    புலியின் காலடி தடங்கள் இருந்தால்தான் அதை பின்தொடர்வது எளிதாக இருக்கும் என தெரிவித்த அவர், 50 வன ஊழியர்கள் இந்த வனப்பகுதியில் ரோந்து பணியில் இருக்கின்றனர் எனவும் 6 மருத்துவர்ரகள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். கூடலூர்,மசினகுடி பகுதிகளிலும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் T23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்த அவர், சிங்காரா பகுதியில் தற்போது சில இடங்களில் T23 புலியின் காலடி இருப்பதாக தகவல் வந்துள்ளது எனவும் அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர் .

    Also Read : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பொன்.ராதாகிருஷ்ணன் நியமனம்- ஹெச்.ராஜா, குஷ்புவுக்கு முக்கிய பொறுப்பு

    3 நாட்களுக்கு முன்னர்தான் நேரடியாக புலி பார்க்கப்பட்டது எனவும் அதன் பின்னர் நேரடியாக பார்க்கவில்லை எனவும் தெரிவித்த அவர், புதர்கள் , மூங்கில் புதர்கள் இருந்ததால் அப்போது மருந்து செலுத்தி பிடிக்க முடியவில்லை . வனப்பகுதியில் 4 பரண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்களாகி விட்டது எனவும் தெரிவித்த அவர், புலி வெளியில் வந்து 3 நாட்களாகி இருப்பதால் வெளியே வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    புலி பதுங்கி இருந்தாலும் கடைசியாக சாப்பிட்ட பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் வெளியே வர வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்த அவர் புலியின் டி.என்.ஏ தொடர்பான தகவல்கள் நம்மிடம் இல்லை எனவும் டி.என்.ஏவை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: