தண்ணீர் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் முன்பே தூங்கிவழிந்த அதிகாரிகள்...!

ஓவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் இதே நிலை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் முன்பே தூங்கிவழிந்த அதிகாரிகள்...!
அமைச்சர் முன்பே தூங்கிவழிந்த அதிகாரி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தூங்கி வழிந்த சம்பவம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவுகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு வாட்டி வதைக்கிறது. நிலத்தடி நீர் 1500 அடி கீழே சென்று விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள சிற்றாறுகள், குளங்கள், கண்மாய்கள் வறண்டுவிட்டன.

இந்நிலையில் நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடை சமாளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தை பொறுப்புடன்  கவனிக்க வேண்டிய அதிகாரிகள், அதனை கவனிக்காமல்  ஆலோசனைகள் ஏதும் வழங்காமல் தூங்கி வழிந்தனர். இப்படி அரசு அதிகாரிகள் சிலர் பொறுப்பு இல்லாமல்  கூட்டத்தில் தூங்கி வழிந்தது தற்போது வைரலாகி வருகிறது.


அமைச்சர் முன்பே தூங்கிவழிந்த அதிகாரி


ஆனால் இது குறித்து ஆட்சியரோ, உயர் அதிகாரிகளோ வாய் திறக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஓவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் இதே நிலை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... குடிபோதையில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி இளைஞர் வாக்குவாதம்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading