ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம்

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கையை மத்திய நிதிக்குழுவினர் அளித்த பிறகு கட்டுமான பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மத்திய நிதிக்குழுவினரும், ஜப்பான் குழுவினரும் ஆய்வு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 263 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், மருத்துவமனை அமைக்க தமிழக அரசின் சார்பில் 202 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு நிதிக்குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை அமைவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா? மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு தேவையான அளவில் உள்ளதா? என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதிக்குழுவினர் அளித்த பிறகு கட்டுமான பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... நடவு செலவைக் குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த தஞ்சை விவசாயி

Also see...


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: AIIMS, Aiims Madurai