Home /News /tamil-nadu /

"பெய்டி" புயல்... இன்றும் நாளையும் கனமழை பெய்யும்

"பெய்டி" புயல்... இன்றும் நாளையும் கனமழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

பெய்டி புயலால் நாளையும், நாளை மறுநாளும் ஆந்திர மாநிலத்துக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
வங்கக் கடலில் புயல் உருவாகும் நிலையில், இன்றும் நாளையும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 11 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, இந்த தாழ்வுநிலை, சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் சுமார் 870 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக் கொண்டுள்ளதாகவும், அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல், ஆந்திர மாநிலம் ஒங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், நாளையும், நாளை மறுநாளும் ஆந்திர மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் காரணமாக தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று கன மழையும், நாளை அதி கன மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Rain, மழை
சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது.


இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு காற்று வீசியதோடு, பல இடங்களில் லேசான மழை பெய்தது.

Also see... தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cyclone Phethai, Weather Forecast

அடுத்த செய்தி