Home /News /tamil-nadu /

யாரும் உதவிக்கு வராததால் 10 கி.மீ. மகளின் சடலத்தை தோளில் சுமந்த தந்தை

யாரும் உதவிக்கு வராததால் 10 கி.மீ. மகளின் சடலத்தை தோளில் சுமந்த தந்தை

  • 1 minute read
  • Last Updated :
ஒடிசாவில், உதவி ஏதும் கிடைக்காத நிலையில், இறந்துபோன மகளின் உடலை தந்தை ஒருவர் 10 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகுந்த் தோரா. தித்லி புயலால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் முகுந்தின் மகள் அடித்துச் செல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பிறகு தனது வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மகளின் உடலை கண்டெடுத்தார்.

உதவிக்கு யாரும் வராத நிலையில், பிளாஸ்டிக் கவரில் மகளின் சடலத்தை சுற்றிய முகுந்த் அதை தனது தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
First published:

அடுத்த செய்தி