ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக அக்டோபர் 25ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Tamilnadu, Tn schools