முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai High court | அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு  நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தனர். பின்னர் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்தத் தயாராக இருந்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதுகுறித்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பாக இருந்தால் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்த மனுதாரர்கள், குறிப்பிட்ட இந்த நிலம் பட்டா நிலம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

First published:

Tags: Chennai High court