ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… அச்சுறுத்தும் உடல் பருமனுக்கு என்ன காரணம்?- Explainer

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… அச்சுறுத்தும் உடல் பருமனுக்கு என்ன காரணம்?- Explainer

ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும்.

ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும்.

ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும்.

 • 2 minute read
 • Last Updated :

  புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் இந்த வரிசையில் தற்போது உடல் பருமன் பாதிப்பும் சேர்ந்துள்ளது. 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு உலகில் உள்ள மக்கள் தொகையில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 135 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் வெளியிட்டுள்ளது. உடல் பருமனாகி விட்டால் அத்துடன் சேர்ந்து பல்வேறு விதமான நோய்களும் வர தொடங்கும். உடல் பருமன் எதனால் ஆகிறது? இது எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  உடல் பருமன்:

  உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உடல் பருமனாகிறது. ஒருவரின் உடல் நிறை குறியீட்டெண்ணை ( Body Mass Index (BMI)) வைத்து அவர் பருமனாக உள்ளாரா, இல்லையா? என்பதை அறிய முடியும். BMI 25-க்கு மேல் இருந்தால் அதிக எடை என்று அர்த்தம், இதுவே 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று அர்த்தம். இதை ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை வைத்து கணிக்கப்படுகிறது.

  நீண்டகால நோய்கள்:

  உடலில் அதிக கொழுப்பு சேர்தல், அதிக சர்க்கரை சேர்தல், எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருத்தல் போன்றவற்றால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால பாதிப்புகள் தரும் நோய்கள் உருவாகலாம். இத்துடன் சில வகையான புற்றுநோய்களும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் நகர் புறங்களில் உள்ள மோசமான வாழ்வியல் மாற்றத்தால் அதிக பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.

  இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

  கருத்தரிப்பு:

  ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும். அந்த வகையில் பெண்களின் இனப்பெருக்க அமைப்பையும் இது பாதிக்க செய்யும். உடல் பருமனால் ஹார்மோன் உற்பத்தியில் சீர்கேடு ஏற்பட்டு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்கிற ஹார்மோன் பாதிப்பு வரும். மேலும் இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளும் உண்டாகும்.

  உளவியல் நலன்:

  உடல் பருமனாக இருப்பதால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம். இது ஒருவரின் மனநலனை நேரடியாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்க்கையின் மீது வெறுப்பு அதிகம் இருப்பது போன்று உணர்வார்கள். தனிமை, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இவற்றால் ஏற்படுகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  குழந்தைகளுக்கு உடல் பருமன்:

  குழந்தைகள் பார்ப்பதற்கு பருமனாக இருந்தால் புசுபுசுவென இருப்பதாக நினைத்து கொள்வோம். ஆனால் அது அப்படி கிடையாது. குழந்தைகளின் உடல் பருமனாக இருந்தால் அவர்களின் எடையை குறைக்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக கொரோனா தொற்று வந்த பிறகு வீடுகளிலே குழந்தைகள் அடைந்து இருப்பதால் உடல் எடை கூடுவதுண்டு. எனவே, அவர்களை அதிக நேரம் வியர்வை சிந்தும் விளையாட்டை விளையாட வையுங்கள்.

  இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

  எப்படி சரி செய்வது?

  உடல் பருமனை சரிசெய்ய சில வழிமுறைகள் உண்டு. தினசரி உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள் போன்றவற்றின் மூலம் பருமனை குறைக்கலாம். மேலும் கொழுப்புள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் பூட்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உடல் பருமனை குறைக்க முடியும்.

  First published: