மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் புதிய மனு

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

 • Share this:
  மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல செய்துள்ளார்.

  அதில், 2015ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சலோனி குமாரி தொடர்ந்த இடஒதுக்கீடு வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Also see:

  இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படியும், தேவைப்பட்டால் சலோனி குமாரி வழக்கில் இணைந்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் அன்புமணி ராமதாஸ் புதிய மனு தாக்கல் செய்துள்ளதார்.
  Published by:Karthick S
  First published: