ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு புறக்கணிப்பு - மத்திய கல்வியமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்

சட்டப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு புறக்கணிப்பு - மத்திய கல்வியமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு.

சட்டப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்காத சட்டப் பல்கலைக்கழங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி இடஒதுக்கீடு குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, திமுக எம்.பி டி.ஆர் பாலு எழுதியுள்ள கடிதத்தில், 2020-21 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையில் சட்டப் படிப்பு, சட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொள்கை மீறப்பட்டுள்ளதாக சாடியுள்ளார்.

  இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு இடங்களையும்,  மாநில இடங்களில் அந்தந்த மாநில ஆணைப்படியும் இடஒதுக்கீடு வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

  போட்டி அட்டவணை

  இதுதொடர்பாக விதிமுறை மீறிய திருச்சி உள்ளிட்ட 13 மத்திய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

  Published by:Sankar
  First published:

  Tags: OBC Reservation