• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது - ராமதாஸ் ஆவேசம்

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது - ராமதாஸ் ஆவேசம்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ”மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும் கொடுமை காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டு, சமூகநீதி நிலைநிறுத்தப்படும் நாள் எந்நாளோ?” என்றார்.

    மக்கள் முறையாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ”ஊரடங்கை மதிக்காதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது சரியானது தான்.



    இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதை பின்பற்றாதது தான் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகும். இனியாவது மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: