ஓபிசி கிரீமிலேயர் விவகாரம்: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

ஓபிசி வகுப்பினரில் கிரீமிலேயர் கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிசி கிரீமிலேயர் விவகாரம்: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கிரீமிலேயர் பிரச்னையில் தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயரை வகைப்படுத்த வருவாய் ஆய்வு வரம்பில் சம்பளத்தைச் சேர்ப்பதைக் கைவிட வேண்டும் என்றும் கிரிமிலேயர் குறித்து பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுவதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இத்தகைய நெருக்கடியான நேரத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த முடிவைத் திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வையும், அகில இந்திய ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading