ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடுக்கோரி தமிழகத்தின் பிரதான கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

  இதில் நேற்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என தெரிவித்தது.

  Also read: இங்கிலாந்தில் முதல் முறையாக பூனைக்கு கொரோனா தொற்று உறுதி

  மேலும், சட்டம் இயற்றுவது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல் செய்தால் தங்களையும் அந்த வழக்கில் சேர்க்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

  Published by:Rizwan
  First published:

  Tags: DMK, OBC Reservation