சோழவந்தான் தொகுதியில் ரூ.3.89 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரிய வீடுகள் - ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சோழவந்தான் தொகுதியில் ரூ.3.89 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரிய வீடுகள் -  ஓ.பன்னீர்செல்வம் தகவல்
ஓ.பன்னீர் செல்வம்
  • News18
  • Last Updated: July 12, 2019, 1:27 PM IST
  • Share this:
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சோழவந்தான் தொகுதியில் 3.89 கோடி ரூபாய் மதிப்பில் 619 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம், தனது தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் கட்டித்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நில உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களே வீடு கட்டிக்கொள்வதற்கு வசதியாக தமிழக குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும் வாடிப்பட்டியில் 380 வீடுகளும், அலங்காநல்லூரில் 239 வீடுகளும் மொத்தமாக 619 வீடுகள், 3.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருவதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்