ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000.. பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவிக்க ஓபிஎஸ் கோரிக்கை!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000.. பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவிக்க ஓபிஎஸ் கோரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

OPS | கடந்த ஆண்டு பொங்ல் தொகுப்பு திட்டத்தால் அரசாங்க பணம் விரயமாக்கப்பட்டது தான் மிச்சம் - ஓ.பன்னீர்செல்வம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி - சேலை வழங்குவது பொங்கல் தொகுப்பு வழங்குவது ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற நடைமுறையாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் என ஆணையிட்டது. ஆனால், 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

மேலும், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தால் மக்கள் எந்த பயனும் அடையவில்லை என்றும், அரசாங்க பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ | தமிழ் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் - உதயநிதி ஸ்டாலின்

இதனால் தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து அட்டைதார்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, O Panneerselvam, OPS, Pongal