ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்தோம் - ஓ.பன்னீர்செல்வம்

ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்தோம் - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக சட்ட விதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  அதிமுகவினரால் பெரும் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற வினாவிற்கு விடை தெரியும் நாளென்பதால் இந்த கூட்டத்தொடர் அதிமுகவினரால் பெரிதும் எதிர்பார்ப்போடு தொடங்கியது.

  இந்த நிலையில் சரியாக 9.50 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் கூட்டாக வந்தனர். பேரவை வளாகத்திற்குள் சென்று கையெழுத்திட்ட பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இரங்கல் தீர்மானத்தில் கலந்து கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

  ALSO READ | TNAssembly: எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆப்சென்ட்.. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பவுன்சர்ஸுடன் வருகை!

  அப்போது பேசிய அவர், "அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளோம். இபிஎஸ் குறித்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு 16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தினார் ஜெயலலிதா.இரு தலைவர்களின் தியாகம், தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்து உருவாக்கியது இந்த அதிமுக.

  எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக சட்ட விதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம்.பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்", என்றார்.

  பேரவைக்கு பாதுகாவலர்களோடு வந்துள்ளீர்களே அதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் "அப்படி யாரும் எங்களோடு வரவில்லை என தெரிவித்தார். இடையே பேசிய வைத்தியலிங்கம், "பாதுகாவலர்களோடு வரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அது தவறான தகவல்", எனக் கூறினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Loksabha, O Pannerselvam, OPS, OPS - EPS