முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TN Assembly Election Result 2021 Latest Update : போடி தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் ஓபிஎஸ் வெற்றி

TN Assembly Election Result 2021 Latest Update : போடி தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் ஓபிஎஸ் வெற்றி

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Last Updated :

சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட இழுப்பறிக்கு பின் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. தற்போது வரை வெற்றி மற்றும் முன்னிலையுடன் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

அதிமுக 65 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் இடையே கடும் போட்டி நிலவியது.

போடி தொகுதியில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 28 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் ஓபிஎஸ் 11021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் நிலவரம்.

திமுக - தங்கதமிழ்செல்வன் - 89,029

அதிமுக - ஓ.பன்னீர்செல்வம் - 1,00,050

நாம் தமிழர் - பிரேம் சந்தர் - 11,114

அமமுக - முத்துச்சாமி - 5,649

மநீம - கணேஷ்குமார் - 4,128

நோட்டா - 1,403.

top videos

    போடி தொகுதியில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றி பெற்றுள்ள ஓபிஎஸ் கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட தற்போது குறைவாகவே வெற்றி அடைந்துள்ளார்.

    First published:

    Tags: ADMK, Bodinayakanur Constituency, OPS, TN Assembly Election 2021