• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம்

ஓபிஎஸ் மனைவி வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்,

  • Share this:
    ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறந்த தகவல் அறிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பெருங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: