திருமண விழா: காத்திருந்த முதலமைச்சர்... பட்டு சட்டை அணிந்து வந்த துணை முதல்வர்

திருமண விழா: காத்திருந்த முதலமைச்சர்... பட்டு சட்டை அணிந்து வந்த  துணை முதல்வர்

திருமண விழா

123 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படன.

  • Share this:
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை பச்சாபாளையத்தில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விழா நடைபெறும் பந்தலுக்கு 8.40 மணிக்கு வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 9.00 மணிக்கு வந்தார். துணை முதலமைச்சர் வரும் வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காத்திருத்தார்.

    வழக்கமான வெள்ளை சட்டையில் இல்லாமல் பட்டு சட்டை அணிந்து வந்தார் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.

    விழவில், 123 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படன.

    திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அதிமுகவில் மட்டும்தான் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

    அதிமுக, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி. தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6,010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கி இருக்கின்றது. இதுவரை 2,98,849 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    திமுக அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றுவதில்லை. அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம். அவினாசி அத்திக்கடவு திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்க பணி விரைவில் துவங்க இருக்கின்றோம்.

    தமிழ்நாடு தொழில் துவங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் ஆர்வமாக தமிழகம் வருகின்றனர். இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக கோவை, சென்னை இருக்கின்றன” என்று பெருமிதம் தெரிவித்தார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. அதிமுக வரலாற்றில் எடுத்து காட்டு மண்டலமாக கொங்கு மண்டலம் இருக்கின்றது.

    ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறாமல் அப்படியே நடைமுறைபடுத்தும் முதல்வராக எடப்பாடி இருக்கின்றார். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடிக்கு மேற்பட்ட நிதி, மத்திய அரசுக்கு செல்கின்றது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் திமுக பெற்று கொடுக்க வில்லை.

    ஒரு மெடிக்கல் கல்லூரி வாங்குவதற்கு அலைய வேண்டி இருக்கும் நிலையில், 11 மருத்துவகல்லூரிகளை அதிமுக அரசு பெற்று கொடுத்து இருக்கின்றது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பூர்வாங்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற பொது தேர்தலில் வீடு வீடாக நமது சாதனைகளை எடுத்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.

    Must Read: அதிமுக வேட்பாளர் விருப்பமனு: தேதி விவரம் வெளியீடு

     

    மேலும், “விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி, இன்று திருமணம் செய்த மணமக்கள் இருக்க வேண்டும் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: