ஓபிஎஸ் வருகை ரத்து : காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தொண்டர்கள்

ஓபிஎஸ் வருகை ரத்து : காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தொண்டர்கள்

ஓ.பன்னீர்செல்வம்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வராத நிலையில், அமைச்சர் பென்ஜமின் இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

  • Share this:
    அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சென்னையை அடுத்த போரூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேரமின்மை  காரணமாக ஓபிஎஸ் வருகை ரத்தானதால் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்களும், பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருப்பதால், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, தலைவர்கள்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் சென்னை அடுத்த போரூர் மேம்பாலம், ரவுன்டானா அருகே பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

    அவர், அதிமுக சார்பில்  மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர்  பெஞ்சமின் மற்றும் கூட்டணி கட்சியான பாமக சார்பில் பூந்தமல்லியில் போட்டியிடும் ராஜமன்னாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதாக இருந்தது.

    இந்நிலையில், பன்னீர்செல்வம் திருவள்ளூரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கு வர பத்து மணியைக் கடந்துவிடும் என்பதால், போரூரில் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.



    இதனால், ஓபிஎஸ் வருகைக்காக நீண்ட நேரம்  காத்திருந்த தொண்டர்கள் மகளிர் அணியினர் பொதுமக்கள் பெண்கள் என அனைவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    Must Read : மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக அல்ல - எடப்பாடி பழனிசாமி

    துணை முதலமைச்சர் வராத நிலையில், அமைச்சர் பென்ஜமின்   இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: