ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ. : வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ. : வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்.

  • Share this:
சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு, துணை முதலமைச்சரின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்து ஆசி பெற்றது அங்கிருந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மற்றும் வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் நேற்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத்தும் வந்தார்.

Must Read :  லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன் : செல்லூர் ராஜுக்கு சின்னம்மா சவால்

 

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்த பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னர் ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்து கட்சி சீனியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தி, படம் : ஈஸ்வரன், வாடிப்பட்டி
Published by:Suresh V
First published: