• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ். தேர்வு!

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ். தேர்வு!

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றிய ஆட்சி அமைத்தது. 65 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வராக மே.7ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட குழப்பங்களுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து, கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இதனால் கட்சித் தலைமையால் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது. இதனிடையே, சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி தொடங்க உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கலந்துகொண்டனர். இதில் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் யார் என்பது ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவை துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    Also read: ஆன்மீக பெரியோர்களின் நம்பிகையை பெறும் அளவிற்கு அரசு செயல் பட வேண்டும்: வானதி சீனிவாசன்

    மேலும், பொருளாராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனேஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: