திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஓ.பன்னீர்செல்வம்

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

மதுரை வில்லாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று கூறினார்.

  • Share this:
    மதுரை வில்லாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று கூறினார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மற்றும் மேலூர் சட்டமன்ற வேட்பாளர் பெரியபுள்ளான் என்கின்ற செல்வம் ஆகிய இருவரையும் ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டு இருக்கிறது, திமுக ஆண்டு இருக்கிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தை அம்மா தொடங்கிவைத்தார். மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியவர் அம்மா.

    ஏழை, எளிய மக்களுக்கு 6.5லட்சம் பேருக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி, தாலிக்கு தங்கம் வழங்கியவர் அம்மா, 4 கிராம் தங்கத்தை 8 கிரமாக உயர்த்தி வழங்கிய அதிமுக அரசு. பெண்களின் பணிச்சுமையை குறைக்க மிக்ஸி, கிரைன்டர் வழங்கியவர் அம்மா. சட்டசபையில் கலைஞரிடம் 2 ஏக்கர் நிலம் எங்கே என்று கேட்டதுக்கு பேசாமல் கைகொடுத்து சென்றார்.

    திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு, அதிமுக அறிக்கை செல்லும் நோட்டு. முதியோர் உதவி தொகையை 2,500 உயர்த்தி வழங்கப்படும். பெண்கள் துணி துவைப்பதற்கு ஏதுவாக விலையில்லாத வாஷிங் மெஷின் வழங்க இருக்கிறோம். ஆணுக்கு நிகராக பெண்கள் வலிமை படைத்தவராக இருக்கிறார்கள்.

    மக்களுக்கு தேவையான அரசு வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகள் அமைத்து தர வேண்டும் திமுக ஆட்சியை விட கடந்த 10 ஆண்டுகளில் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். மக்களாகிய நீங்கள் எஜமானர்கள், நீதிப்பதிகலாக இருக்கும் நீங்கள் நல்ல ஆட்சியை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவினர் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுப்பதில்லை, பியூட்டி பார்லர் சென்று தாய்மார்களிடம் கமிஷன் கேட்பது, புரட்டோ சாப்பிட்டால் உரிமையாளரை குத்து குத்து என்று குத்துகின்றனர்.

    Must Read : வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க சூரிய சக்தி மின் வேலி - முதலமைச்சர் பழனிசாமி

     

    ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல பல வென்று புதிய ஆட்டோ வாங்குவதற்கு நாங்கள் 25,000 ரூபாய் மானியம் வழங்குவோம்” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: