முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக-வை மீட்டெடுப்போம்.... ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீர்மானம்!

அதிமுக-வை மீட்டெடுப்போம்.... ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீர்மானம்!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதிமுக சட்ட விதிகளை காக்கவே இரண்டாவது முறையாக தர்மயுத்தம் நடத்துகிறேன் என சென்னையில் ஆதரவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பன்னீசெல்வத்தின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம் என்று தொண்டர்களுக்கு தெரியும் என்றும், அந்த பெயரை உச்சரிக்கும் தகுதியைக் கூட அவர் இழந்துவிட்டார் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக சட்ட விதிகளை காக்கவே இரண்டாவது முறையாக தர்மயுத்தம் நடத்துகிறேன் எனவும் அவர் கூறினார்.

பின்னர், அதிமுக எனும் தொண்டர்கள் இயக்கத்தை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும், அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா என முப்பெரும் விழாவை அடுத்த மாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

விரைவில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

First published:

Tags: ADMK, OPS